இந்தியாவில் பயங்கர "சுடோகு" காய்ச்சல் பரவுகிறது !
***********************************************************
**********************************************************
***********************************************************
***********************************************************
***********************************************************
ஜப்பானிலிருந்து உருவான "சுடோகு" (SUDOKU) என்ற எண்கணித விளையாட்டு, இந்தியாவில் அதிவேகமாக பிரபலமடைந்து வருகிறது !!! உலகம் முழுவதும், இணையம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் இவ்விளையாட்டை பல ஆங்கில தினசரிகள் (ஹிண்டு, ஹிந்துஸ்டான் டைம்ஸ், டெக்கான் குரோனிகள் ...) பிரசுரிக்கின்றன.
சுடோகு, கீழுள்ள படத்தில் உள்ளது போல், ஒரு (9X9) கட்டங்களாக (மேலும் ஒன்பது சிறு (3X3) கட்டங்களாகவும்) பிரிக்கப்பட்ட சதுரத்தில், சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டு காணப்படும். ஆட்டக்காரர், மீதியுள்ள கட்டங்களை, 1 முதல் 9 வரை உள்ள எண்களால், ஒரு எண் அது இடம் பெற்றிருக்கும் நீளவாக்கு வரிசையிலோ, அகலவாக்கு வரிசையிலோ, (3X3) சிறு சதுரத்திலோ, மீளவும் இடம் பெறாமல் நிரப்ப வேண்டும் !
ஜப்பானில், எண்பதுகளிலேயே பிரபலமான சுடோகு, இப்போது தான் உலகளாவிய மக்களின் ஆர்வத்தை தட்டி எழுப்பியுள்ளது. ரூபிக் கியூப் (RUBIK CUBE) ஒரு காலகட்டத்தில் சிறுவர்களையும், இளைஞர்களையும், பெரியவர்களையும் ஒருசேர வசப்படுத்தியது போல் தற்போதைய "சுடோகு" நிலைமையும் காணப்படுகிறது. எழுத்து விளையாட்டை (CROSSWORD PUZZLE) விடவும் சுடோகு அதிக பிரபலமாகும் என்று தோன்றுகிறது.
சுடோகு எண்கள் சம்மந்தப்பட்ட விளையாட்டு என்றாலும், அதன் கட்டங்களை நிரப்புவதற்கு பெரிய கணிதத் திறமை தேவையில்லை என்பதே இது மேலும் பிரபலமடைவதற்கு முக்கிய சாத்தியமாகத் தெரிகிறது ! எழுத்து விளையாட்டைப் போல சுடோகு விளையாட மெத்தப் படித்தவராகவும், சம்மந்தப்பட்ட மொழியில் நுண்ணறிவு மற்றும் பொது அறிவு உடையவராகவும் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
முரளி தேசிகன் என்ற மென்பொறியாளர், எந்தவொரு சுடோகுவின் அனைத்துக் கட்டங்களை நிரப்புவதற்கு ஒரு ஜாவா புரோகிராம் எழுதியுள்ளார் என்ற செய்தியும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும் !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
2 மறுமொழிகள்:
பாலா,
பத்திரிகைகளில் "பிரபல நடிகை கைது" என்ற தலைப்புப் போட்டு உள்ளே 40 வருடத்துக்கு முன்னால் துணை நடிகையாக நடித்த ஒருவர் வேகமாய்க் காரில் போன குற்றச்சாட்டுக்காய் கைது செய்யப்பட்டதாய் செய்தி வெளியாகும். அதுதான் நினைவுக்கு வருகிறது. நான் ஏதோ பயங்கர விஷக்காய்ச்சலாக்கும் என்று நினைத்துவிட்டேன் :-).
bala
enna idhu onnum puriyala
another japanese game
nice post you have got and I have blogrolled you :)
also check my english blog
(http://dganesh.blogspot.com) and let me know
Post a Comment